நாட்டில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2831 ஆக பதிவாகி இருக்கிறது நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி நாட்டில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,49,92,094 என அதிகரித்து இருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனைத் தொடர்ந்து இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 5,31,884 என பதிவாகியுள்ளது.
இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,44,57,379பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். குணமடைந்தோரின் விகிதம் 98.81 சதவீதமாக இருக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரையில் 220 66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.