fbpx

நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் சதவீதம் 0.01 சதவீதமாக இருக்கிறது……! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…..!

நாட்டில் புதிதாக 403 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4972 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, நாட்டில் இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்றுக்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக இருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 0.01 சதவீதமாக இருக்கிறது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் 98.80 சதவீதமாக இருக்கிறது. இதுவரையில் 220.66 கோடி நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

Next Post

புதுக்கோட்டையில் ப்ளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவர் அதிரடி கைது……! உதவி செய்தவரும் விரைவில் கைது செய்யப்படுவார் காவல் துறை நடவடிக்கை…..!

Sun May 28 , 2023
புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை 666 பேர் எழுதினர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்துறை சேர்ந்த தர்மர் (20) என்ற நபர் பட்டன் கேமரா மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. ஆகவே தர்மரை […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like