fbpx

நடிகர் அஜித்தின் நண்பர் மரணம்..!! சென்னை வந்தது உடல்..!! திரைத்துறையினர் அஞ்சலி..!!

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதாவது, மிலன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பாதிவழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டில் இருந்து மிலானின் உடல் சென்னை வந்தடைந்தது. சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர், உறவினர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Chella

Next Post

இணையத்தில் லீக்கான லியோ படம்..! படக்குழு அதிர்ச்சி…!

Thu Oct 19 , 2023
விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி கட்சி, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு காட்சி தொடங்கியது. தற்போது இந்த படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்து கொண்டு […]

You May Like