மனோரமாவிற்கு இணையாக காமெடியில் கலக்கிய மற்றொரு நடிகை என்றால் அது நடிகை பிந்துகோஷ் தான். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த இவர், பல ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளார். என்ன தான் ஒரு கட்டத்தில் செல்வ செழிப்பாக வாழ்ந்திருந்தாலும், தற்போது 76 வயதை தாண்டிய பிந்து, பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சுயமாக எழுந்து நடக்க முடியாமல், வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார். மேலும், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறிய பிந்து, முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஏதாவது உதவி செய்தால், நன்றாக இருக்கும் என்று சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், பிந்து கோஷை நேர்காணல் எடுக்க நடிகை ஷகீலா சென்றிருந்தார்.
அப்போது, அவர் தனது கஷ்டத்தை கூறி, தான் பெற்ற மகன் கூட தன்னை பராமரிக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். இந்த சூழலில், நடிகை பிந்து கோஷுக்கு உதவி செய்ய யாரை அணுகலாம் என்று பார்வையாளர்களிடம் ஷகீலா கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு நடிகர் பாலாவை தொடர்பு கொள்ளலாம் என்று பலரும் கூறியிருந்தனர்.
அதன்படி, ஷகீலா பிந்து கோஷின் நிலை குறித்து பாலாவிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பிந்து கோஷின் இல்லத்திற்கு ஷகீலா உடன் சென்ற பாலா, ரூ. 80 ஆயிரத்தை பிந்து கோஷிடம் கொடுத்துள்ளார். மேலும், அவரது மருத்துவ செலவுகளையும் தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். இதனால், நடிகை பிந்து கோஷ் பாலாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Read more: “ஈஷாவுக்கு போனதால, என் வாழ்கையில் ஒன்னும் மாறல” நடிகர் சந்தானம் பகிர்ந்த தகவல்..