சென்னை கத்திப்பாரா பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நடிகர் பாபி சிம்ஹா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தில் கேங்ஸ்டர் சேதுவாக நடித்திருந்தார். இவருக்கு இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில், நடிகர் பாபி சிம்ஹாவின் வீடு சென்ன மணப்பாக்கத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், அவருடைய தந்தை ஒரு இடத்திற்கு செல்ல, சொகுசு காரில் ஓட்டுநர் புஷ்பராஜுடன் சென்றுள்ளார். அப்போது பாபியின் தந்தையை அவர் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் மணப்பாக்கத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கத்திப்பாரா பகுதியில் கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாபி சிம்ஹாவின் காரின் முன் பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் அந்த வழியாக பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர். மேலும், 6 பேரின் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், விபத்துக்குள்ளான கார் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும், டிரைவர் புஷ்பராஜை விசாரித்த போது, அவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவர் ஓட்டி வந்த பாபி சிம்ஹாவின் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.