நடிகர் காளிதாஸ் ஜெயராம், மாடலிங் அழகியான தாரணி காளிங்கராயரை காதலித்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 7ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
பொதுவாகவே பழங்கால நடிகர்கள் தங்களது வாரிசுகளை திரையுலகில் அறிமுகப்படுத்த ஆசைப்படுவார்கள். அந்த வகையில், மலையாளம் மற்றும் தமிழில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்துள்ள நடிகர் தான், ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர், அண்மையில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் மாடலிங் அழகியான தாரணி காளிங்கராயரை காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் டிசம்பர் 7ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியார் சொகுசு ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, புகைப்படங்கள் மற்றும் அதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்தாண்டு மே மாதம் தனது மகள் மாளவிகாவின் திருமணத்தை குருவாயூர் கோயிலில் நடிகர் ஜெயராம் நடத்தி வைத்தார். லண்டனை சேர்ந்த நவனீத் கிருஷ் என்பவருடன் திருமணத்தை முடித்த நிலையில், திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தன. இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் திருமணத்திற்கு நடிகர் கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்ட அறிவிப்பு..!!