fbpx

நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு..!! சிக்கியது யார் தெரியுமா..? மனைவி பரபரப்பு புகார்..!!

நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் தங்க நகைகளை திருடியதாக, அவர் வீட்டில் பணி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை காரப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் கருணாகரன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போனதாக கருணாகரனின் மனைவி, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கருணாகரனின் வீட்டில் வேலை செய்து வந்த, காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா (வயது 44) என்பவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, விஜயாவை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர். சுந்தர்.சியின் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாகரன். அதைத் தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, லிங்கா, இறைவி, ஒருநாள் கூத்து என 25-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

Read More : 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்..!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

English Summary

Actor Karunakaran’s maid was arrested for allegedly stealing 60 pounds of gold jewelery from his house.

Chella

Next Post

மருத்துவ காப்பீடு திட்டத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா..? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..!!

Thu Oct 17 , 2024
Check out this post on what to do if you have two health insurance policies at the same time.

You May Like