கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 360 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தெர்மல் ஸ்கேனர் மட்டுமன்றி, ட்ரோனில்ரேடார் பொருத்தி தேடும் பணியும் நடைபெறுகிறது. மீட்பு பணியில் மோப்ப நாய்களையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் உருவான மண்மேடுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் சுற்றி வருகின்றன. தன்னார்வலர்கள், பொதுமக்களும் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களை நடிகர் மோகன்லால் நேரில் பார்வையிட்டுள்ளார். வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருடன் இணைந்து, ராணுவ உடையில் மோகன்லால் பார்வையிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..
Read more ; பூமி உண்மையில் நெருப்புப் பந்தாக இருந்ததா?. பூமி எப்படி உருவானது தெரியுமா?