fbpx

அதிமுகவில் இணைந்தார் நடிகர் பாக்கியராஜ்..! எந்த அணியில் தெரியுமா?

”ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை நல்ல பெயரோடு நடத்தி வந்தார்” என நடிகர் பாக்கியராஜ் கூறியுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து நடிகர் பாக்கியராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டுதான் அதிமுகவை எம்.ஜி.ஆர். துவங்கினார். அவருக்கு பின் ஜெயலலிதா அவருடைய பாதையில் கட்சியை நடத்தினார். அதன் பின் ஓபிஎஸ் கட்சியை நல்ல பெயரோடு நடத்தி வந்தார்.

அதிமுகவில் இணைந்தார் நடிகர் பாக்கியராஜ்..! எந்த அணி தெரியுமா?

கட்சிக்கு சோதனை வந்து உள்ளது. கட்சி முன்புபோல வரவேண்டும் என்பதற்காக தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். நானும் அதையேதான் சொல்கிறேன். அதற்காக என்னை இணைத்து கொண்டு என்னால் செய்ய முடிந்ததை செய்வேன். சிறிய தொண்டனாக என்னால் முடிந்த பணிகளை நான் செய்வேன். விரைவில் அனைவரும் ஒன்று சேருவார்கள். முறையாக இணையவில்லை என்றாலும் தற்போது அதிமுகவில் இணைந்து உள்ளேன். முடிந்தால் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒற்றுமை குறித்து பேசுவேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

மதுபோதையில் இப்படியா செய்வது? அதுவும் காவல்நிலையத்தில்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Fri Aug 26 , 2022
காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திய சில இளைஞர்கள், அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், […]
மதுபோதையில் இப்படியா செய்வது? அதுவும் காவல்நிலையத்தில்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

You May Like