fbpx

ஆர்.எம் வீரப்பன் மறைவு ;ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி!!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர், அதிமுக தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் கடந்த பல ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 98 வயதான ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் வயது மூப்பு காரணமாக காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர். எம்.வீரப்பன் உடலுக்கு ரஜினிகாந்த், இளையாராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”ஆர்.எம். வீரப்பனால் உருவாக்கப்பட்ட பலர் பெயர், புகழுடன் தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இன் தனிப்பட்ட வாழ்க்கையிலும், வலது கையாக இருந்தார்” எனக் கூறினார்.

Next Post

மகாராஜாவாக மிரட்ட போகும் விஜய் சேதுபதி..!! மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..

Tue Apr 9 , 2024
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.. கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ளன. […]

You May Like