நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன். ‘சாமானியன் ’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
திரைப்படங்களில் 80 ஸ் மற்றும் 90ஸ்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் ராமராஜன் மிக முக்கியமானவர் . 1980 -90க்களில் நடித்த பல நடிகர்கள் தற்போது திரைப்படங்களில் ரீ என்ட்ரி ஆகின்றனர். ராமராஜனுடன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கனகா கூட மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பேன் என கூறியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ராமராஜன் எப்போது ரீ என்ட்ரி ஆவார் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ராகேஷ் இயக்கத்தில் ராதாரவி , எம்.எஸ். பாஸ்கரன் ஆகியோருடன் இணைந்து ’’ சாமானியன் ’’ என்ற திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார்.
கடைசியாக கடந்த 2012ம் ஆண்டில் மேதை என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் நடிக்க உள்ளார். எனவே ரசிகர்கள் ’வெல்கம் பேக் ராமராஜன் ’ என பதிவிட்டு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கரகாட்டகாரன் , அம்மன்கோவில் வாசலிலே, எங்க ஊரு காவல் காரன் , சீறி வரும் காளை, எங்க ஊரு மாப்பிள்ளை , உங்க ஊரு பாட்டுக்காரன் , தேடி வந்த ராசாவே உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மண்ணுக்கேத்த பொன்னு, மருதாணி , சோலை புஷ்பங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.