நடிகர் ரெடின் கிங்ஸ்லியும், சீரியல் நடிகை சங்கீதாவும், காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில், தனித்துவமான பாடி லாங்குவேஜ் மூலம் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர் ரெடின் கிங்கிலி. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து அவர் காமெடி நடிகராக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். இதனையே திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இது நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு முதல் திருமணம் என்றாலும் சங்கீதாவுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். சங்கீதாவுக்கு ஏற்கனவே கிருஷ் என்பவருடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சங்கீதாவுக்கு ஷிவியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்ட பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரெடின் கிங்ஸ்கி தனது கையில் தனது மகளை வைத்துக் கொண்டு உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என்பதால் மொத்த குடும்பமும் செம ஹேப்பியாக இருக்கிறார்களாம். அவர் தன்னுடைய மகளை கையில் ஏந்தி கொஞ்சியபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் பிரபலங்களும் தம்பதியர்களை வாழ்த்தியும், தாய் மற்றும் சேய்-இன் நலம் குறித்து விசாரித்தும் வருகிறார்கள்.