fbpx

“கதைக்காக இப்படி ஒரு காட்சியில நடிச்சுட்டேன்” நடிகை சதா வேதனை..

‘ஜெயம்’ படம் மூலம் தமிழில், நடிகையாக அறிமுகமானவர் சதா. இவரது “போயா, போ” என்ற வசனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 2003-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி உட்பட பல படங்களில் நடித்த அவர், தெலுங்கு, இந்தியிலும் நடித்து வந்தார். நடிகை சதா 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. டான்ஸ் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சதா நடுவராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனது கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றது. இக்காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என இயக்குனரிடம் கூறினேன். ஆனால் இயக்குனர் கதைக்கு இது கட்டாயம் தேவை என்று கூறி நடிக்க சொன்னதாகவும், அந்த காட்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று அழுததாகவும், தற்போதும் இக்காட்சியை பார்த்தாலும், நினைத்தாலும் வேதனையாக இருப்பதாக கூறியுள்ளார்.

Maha

Next Post

தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்; விரக்தியில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்..

Tue Sep 26 , 2023
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரைச் சேர்ந்தவர் 47 வயதான ராஜ்குமார். விவசாயம் செய்து வரும் இவர், 15 ஏக்கர் விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார். ஜூன் மாதம் 12-ந்தேதி, டெல்டா மாவட்ட விவசாயிகளின் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் கடைமடை பகுதிக்கு குறைந்த அளவு தான் சென்றுள்ளது. இதனால் ராஜ்குமார் சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் நீரின்றி வாடியுள்ளது. இதனால் ராஜ்குமார் மிகுந்த […]

You May Like