யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சிங்கமுத்து தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை. திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களையும் மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலு தரப்பில், இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. இந்த வழக்கில் வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெறுவதாகவும், இனி அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேலும், பேட்டி, வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும்படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read more ; முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடாதீங்க.. உயிருக்கே ஆபத்து! மருத்துவர்கள் வார்னிங்!