fbpx

‘ நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்..’ ஆமிர் கானின் சகோதரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

அமீர் கானின் சகோதரரும், நடிகருமான பைசல் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இந்த வழக்கு விசாரிக்கப்படுமா இல்லை என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். இதில் பல ஏஜென்சிகள் (சிபிஐ, இடி, என்சிபி) ஈடுபட்டுள்ளன. விசாரணை நடந்து வருகிறது. சில சமயங்களில் உண்மை வெளியே வராது. அனைவரும் அறியும் வகையில் உண்மை வெளிவர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்..” என்று தெரிவித்தார்..

க்டந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.. அவரின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.. இதுதொடர்பான வழக்கை, சிபிஐ, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மற்றும் அமலாக்க இயக்குனரகம் ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றனர்..

மறைந்த நடிகரின் திடீர் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் சில இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் என்சிபி விசாரணையைத் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், அவரின் காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோரை என்சிபி கைது செய்தது. ரியா, ஒரு மாதத்திற்கும் மேலாக மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

என்சிபி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுஷாந்தின் மரணம் தொடர்பாக போதைப்பொருள் தொடர்பான இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் லைவ்-இன் பார்ட்னர் மற்றும் காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் ஆகியோரை கடந்த ஆண்டு செப்டம்பரில் என்சிபி கைது செய்தது. எனினும் இருவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அடுத்த மாதம் முதல் 5G சேவை அறிமுகம்.. அதை பயன்படுத்த 5G ஸ்மார்ட்போன் வேண்டுமா..?

Sat Sep 17 , 2022
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவைகள் அறிமுகம செய்யப்படும் […]

You May Like