இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவரான மாணவி மீரா கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் தன் தோழியை பார்க்க சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மீராவின் தோழிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் இழப்பிற்கு திரித்துலகினர் உளப்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.