நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..
2016-17 வருமான வரி கணக்கில், புலி படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளத்தில் ரூ.15 கோடி மறைத்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.. இதற்காக விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது..
இந்நிலையில் கால தாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்பதால் வருமான வரித்துறை பிறப்பித்த அபராத உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி தடை விதித்தார்.. மேலும் இந்த வழக்கில் செட்டம்பர் 16-ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்..