fbpx

நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும்..!! மாணவிகளை அழைத்து பிரம்மாண்ட விழா..!! ஏற்பாடுகள் தீவிரம்..!!

நடிகர் விஜய், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 1339 மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார்.

குறிப்பாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்கக் கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கும் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இதேபோல் நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். நடிகர் விஷால், கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் நடத்தியது போல, உதவி பெறும் மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து வந்து விழா நடத்த நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Chella

Next Post

குக் வித் கோமாளி சீசன் 4..!! இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த அந்த 2 பேர்..!! யார் தெரியுமா..?

Sat Jul 1 , 2023
விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், இதில் 4 சீசன்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வானார். முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது. இப்போது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 4-வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் […]
குக் வித் கோமாளி சீசன் 4..!! இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த அந்த 2 பேர்..!! யார் தெரியுமா..?

You May Like