fbpx

மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!! எந்த தேதியில் தெரியுமா..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு ஊக்கத்தொகையும் வழங்கினார். இதுதான் அவர் அரசியலில் களமிறங்குவதற்கான முதல் படியாக அமைந்தது. காலை முதல் இரவு வரை அசராமல் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி மாணவ-மாணவிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மாணவர்களை ஜூன் 4ஆம் தேதிக்கு பின் நேரில் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு போல் இல்லாமல், இந்தாண்டு சரியான முறையில் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வரவுள்ளதை நிலையில், அதற்கு முன்னரே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 1,500 மாணவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும், மொத்த நிகழ்ச்சிக்கு 75 லட்சம் தொகை செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு 25 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் இந்த விழாவுக்கு பட்ஜெட் போடப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் 1,500 மாணவ, மாணவிகளுக்கும் தன்னுடைய கையால் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவிகளின் வாக்குகளை முழுவதுமாகப் பெற அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர். மேலும், மாணவர்களின் ரிசல்ட் வெளியானபோதே விஜய் “விரைவில் சந்திப்போம்” என்று ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Read More : தினமும் சர்க்கரையை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்..? மீறினால் என்ன ஆகும்..?

Chella

Next Post

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!! மத்திய அரசு கொடுத்த முக்கிய வார்னிங்..!!

Thu May 16 , 2024
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Android Smartphone | இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஏஜென்சியான செர்ட்-இன், இந்திய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மீறல்களின் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதைக் குறிக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயனர்களின் தனிப்பட்ட தரவு கசிவுக்கு வழிவகுக்கும் பல பாதிப்புகளை Cert-In கண்டறிந்துள்ளது. […]

You May Like