fbpx

“இது வேற மாறி” த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய செயலி.! நடிகர் ‘Vijay’ அதிரடி மூவ்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய்(Vijay) சில வாரங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இவரது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டப்பட்டது. கட்சி தொடங்கிய பின் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தளபதி விஜய்.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு இலக்காக கொண்டு தமிழ்நாடு வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது. அந்தத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் வேலைகள் நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை இந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு இடப்பட்டு இருக்கிறது.

மேலும் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது அடையாள எண் அடிப்படையில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு நிர்வாக பொறுப்பு வழங்கப்படும் எனவும் த.வெ.க தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே கட்சி தொடங்கிய புதிதில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகம் அறிமுகப்படுத்தப்பட இருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் புதுமையாக பார்க்கப்படுகிறது. 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நடிகர் விஜய்(Vijay) மற்றும் த.வெ.க கட்சிக்காரர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

English Summary: Actor Vijay’s TVK will introduce apps for membership. This new initiative will be introduced next week.

Next Post

Farmers Protest | டெல்லியில் மேலும் ஒரு விவசாயி பலி..!! மீண்டும் பதற்றம்..!! பரபரப்பு..!!

Thu Feb 22 , 2024
மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக காவல்துறை நடத்திய புகைக்குண்டு வீச்சில், மேலும் ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி சென்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றதால், சாலைகளில் தடுப்புகளை […]

You May Like