fbpx

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு..!! எங்கு எப்போது தெரியுமா..? பிரியாணி, கிடா விருந்து..?

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் அடுத்தக்கட்டமாக பிப்ரவரி மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு ”தமிழக முன்னேற்றக் கழகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தன்னுடைய கட்சியில் பெண்களுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்க உள்ளாராம் விஜய். மேலும், ஊழல் செய்துவிட்டு பிற கட்சிகளில் இருந்து அதீத செல்வாக்குடன் வந்தாலும் அவர்களை தன் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதேபோல, சினிமா பிரபலங்களுக்கும் தன் கட்சியில் பெரிய அளவில் முக்கியத்துவம் விஜய் கொடுப்பாரா? என்பது சந்தேகம் என்கிறனர்.

அதேபோல, ஏப்ரலில் நடக்க இருக்கும் தனது பிரமாண்டமான அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை எப்போதுமே அரசியல்வாதிகளுக்கு ராசியான இடம். குறிப்பாக, விஜயின் ஆரம்பகாலத்தில் சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்த் கட்சி மாநாட்டைத் தொடங்கிய இடமும் இதுதான் என்பதால் மதுரையைத் தேர்ந்தெடுத்துள்ளாராம் விஜய். இந்த மாநாட்டில் பிரியாணி, கிடா விருந்து என்று களைக்கட்டப் போகிறதாம்.

Chella

Next Post

"நிர்மலா சீதாராமனை பதவி விலகக் கோரிய வருவாய் துறை அதிகாரி சஸ்பெண்ட்.." ஓய்வு பெறுவதற்கு முன் பாய்ந்த நடவடிக்கை.!

Wed Jan 31 , 2024
சென்னையில் இந்திய வருவாய் சேவை துறையின் துணை ஆணையராக பணியாற்றிய பாலமுருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து இந்திய வருவாய்த்துறை உத்தரவிட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறை தெரிவித்திருக்கிறது. சென்னை இந்திய வருவாய் துறையில் ஜிஎஸ்டி பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வருபவர் […]

You May Like