தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின்.முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின்.
தமிழில் முன்னணி நடிகையின் அந்தஸ்தில் இருந்த அசினுக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க பாலிவுட் நடிகையானார். அங்கும் முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் என ஸ்டார் நடிகர்களின் ஜோடியாக நடித்தார். இப்படி ஒரு கம்ப்ளீட் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த அசின் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மாவை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவில் இருந்து விடைபெற்றார்.
அசினின் முதல் காதல் : சினிமாவில் வலம் வந்த காலத்தில், அசினின் வாழ்க்கையில் காதல் வந்தது. பாலிவுட் நடிகர் நிதின் முகேஷை அசின் காதலித்து, அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நடிகை அசின், ஊடகங்களுக்கு இது குறித்து தெரியக்கூடாது என்று நடிகர் நிதினுக்கு ஒரு நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நடிகை அசின் படங்களில் நடிக்கும் போது நடிகர்கள் சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இதனால் கோபமடைந்த நடிகர் நிதின் முகேஷ், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி நடிகை அசின் பற்றிப் பேசி, இருவரும் காதலித்து வருவதாக செய்தியை வெளியிட்டார். பிரஸ் மீட்ல நடிகர் நிதின் ‘அசின் ஒரு மோசடிக்காரி. அவங்க என்கிட்ட நிறைய உதவி வாங்கி இருக்காங்க. நான் அவங்களுக்கு நிறைய பண உதவி கூட பண்ணிருக்கேன். ஆனா இப்ப அவங்க கைக்கு எட்டல’ன்னு சொன்னாரு. அதோட அவங்க ரெண்டு பேரோட லவ் ஸ்டோரி முடிஞ்சுது.
அந்த நேரத்துல அசின் நடிச்ச பாலிவுட் படமும் சரியா போகல. கொஞ்ச நாள்ல நடிகை அசின் பாலிவுட்ல ஓரங்கட்டப்பட்டாங்க. அதன்பிறகு 2010ல் நடந்த ஐஃபா சினிமா விழாவில் தான் மற்றொரு அடி விழுந்தது. இலங்கையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அசினை தமிழ் சினிமா தடைசெய்தது. காரணம் என்னவென்றால் அந்த நேரத்துல தமிழர்களுக்கும் இலங்கைக்கும் மனஸ்தாபம் இருந்துச்சு. தமிழில் பட வாய்ப்புகளை இழந்த அசினுக்கு, நிதின் முகேஷ் பேட்டியை தொடர்ந்து தெலுங்கிலும் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. திரை துறையில் உச்சத்தில் இருந்த அசின் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகியது குறிப்பிடத்தக்கது.
Read more : சாஹல் – தனஸ்ரீ விவகாரத்து உறுதி..!! அப்படினா அந்த விஷயம் உண்மையா..? முறைப்படி நீதிமன்றம் செல்ல சம்மதம்..!!