பிரபல நடிகர் ஒருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக 15000 அடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பராசூட் வேலை செய்யாததால் பதற்றமான நிகழ்வாக மாறியது.
ஐதராபாத்தில் பிரபல நடிகராக தெலுங்கு மொழியில் முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2004 ம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். 2011ம் ஆண்டு தமிழில் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.

2015ம் ஆணடு ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.கடந்த 2020ம் ஆண்டு ’ஜானு’ என்ற திரைப்படத்தில் ’ராம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து பிரபலமான ஒரு திரைப்படம் ’96’. இத்திரைப்படத்தின் தெலுங்கு வடிவில் இவர் ராம்- ஆக நடித்திருந்தார். அவர் ஜானு திரைப்படத்தில்நடித்தபோது ஒரு காட்சிக்காக 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

பாதியில் பாராசூட் வேலை பார்க்காமல் போனதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.இந்த தருணத்தை ஷர்வானந்த் தற்போது தனியார் தொலைக்காட்சிக்கு பகிர்ந்துள்ளார்.

’’ திரைப்படத்தின் காட்சிக்காக 15 ஆயிரம் அடியில் இருந்து குதித்தேன். இதற்காக நான் பல முறை பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி எடுத்த போதும் ஷுட்டிங்கின்போது பாராசூட் வேலை செய்யாத காரணத்தால் நான் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தேன். அறுவை சிகிச்சைக்கு பின்னர் 27 நட் எனது வலது கையில் போடப்பட்டது. இதனால் எனது கால்களில் 2 தகடுகள் பொருத்தப்பட்டு நான் நடக்கவே சிரமப்பட்டேன். 2 அரை ஆண்டுகளுக்குப் பின்னரே முழுமையாக குணம் அடைந்தேன். என் அம்மா, அப்பா, நண்பர்கள் என அனைவரும் என்னை நன்றாக கவனித்தார்கள். நான் என் வாழ்க்கையில் இந்த நிகழ்வை மறக்க மாட்டேன். ’ என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜானு திரைப்படத்திற்கு பின்னர் ஸ்ரீகாரம், மஹா சமுத்ரம், ஆவாலு மீக்கு ஜோஹராலு ஒக்கே ஜீவிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கோ அன்டே கோடி என்ற திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும் இவர் இருந்துள்ளார்.