fbpx

படுக்கை அறைக்கு அழைத்து இயக்குனர் செய்த காரியம்; தற்கொலைக்கு முயற்சி செய்த பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்..

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் அன்பான இளம் நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகை அஸ்வினி நம்பியார். இவரை ருத்ரா என்றும் பலர் அழைப்பது உண்டு. மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் புதுநெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, புதுப்பட்டி பொன்னுதாயி, முதல் பயணம்,  ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே, ஓரம் போ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் இவர்.

ஆனால், தனது திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். பின்னர், 2017 ஆம் ஆண்டில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர், சுழல் என்னும் வெப் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது, ​​மலையாளப் படத்தில் பணிபுரியும் போது தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும் போது, “அவர் ஒரு பெரிய இயக்குனர். என் தந்தை வயது இருக்கும் அவர் ஒரு நாள், படம் பற்றி பேச வேண்டும் என்று அவர் என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்தார். இயக்குனர் ஒரு தனி வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் கீழ் தளத்தில் அலுவலகம் உள்ளது. எப்போதும் என்னுடன் என் அம்மா, வருவது உண்டு. ஆனால் அன்று, என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், என்னுடன் ஒரு பெண் சிகை அலங்கார நிபுணர் வந்தார்.

நாங்கள் தரை தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் காத்திருந்தோம். அப்போது, அவரது ஊழியர்களில் ஒருவர் வந்து, சார் மேல் மாடியில் இருப்பதாகவும், அங்கு அவரை சந்திக்கும்படி இயக்குனர் கூறியதாகவும் அவர் என்னிடம் கூறினார். இதனால் நான் மாடிக்கு சென்றேன், அப்போது தனது படுக்கை அறையில் இருந்த இயக்குனர் எண்ணெய் உள்ளே வரும்படி கூறினார்.

இதனால் நான் உள்ளே சென்ற போது, அவர் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டார். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு சிறிது நேரம் ஆனது. அது என் தவறா என்று நான் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதனால் அன்றிரவு நான் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன். ஆனால் நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டேன்” என்று கூறியுள்ளார். 

Read more: “ரூ. 2500 காசுக்காக, நான் ரோட்டுல இதை செஞ்சேன்” நடிகை வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்த ரகசியம்..

English Summary

actress ashwini shares about her worst experience

Next Post

11 வயது மகள் மீது, தந்தைக்கு ஏற்பட்ட ஆசை; ஆசையை அடக்க முடியாமல் தந்தை செய்த காரியத்தால் பரபரப்பு..

Sun Mar 9 , 2025
11 years old girl was sexually abused by her father

You May Like