fbpx

நடிகர் கமலால் பால்கனியில் இருந்து கீழே குதித்த நடிகை.. யார் தெரியுமா?

நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் தான் கமலஹாசன். இயக்குனர் கே.பாலச்சந்தர் படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், இன்று வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

இவருடன் நடிக்கும் நடிகைகள் இவரின் அழகு, திறமையைப் பார்த்து காதலில் விழுவது உண்டு. அந்த வகையில், நடிகர் கமலுடன் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த ஸ்ரீவித்யாவும் கமலும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால், ஸ்ரீவித்யாவின் தாயார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களின் காதல் முடிந்து போனது. இதையடுத்து, கடந்த 1978ல், கமல் வாணி கணபதியை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், 1988ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நடிகை சரிகா உடன் பழகியதால் தான் கமல்ஹாசன் தனது மனைவியை பிரிந்தார் என்று கூறப்படுகிறது. கமல், சரிகாவுடன் பழகியது குறித்து வாணி கணபதிக்கு தெரியவந்துள்ளது. இதனால் தான் வாணி கணபதி பிரிந்துவிட்டாராம். பின்னர் அவர் சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனால், கமல் நடிகை கவுதமியுடன் நெருங்கி பழகியுள்ளார்.

இதனால் மனம் உடைந்து போன சரிகா, இது குறித்து பலமுறை கமல்ஹாசனுடன் பேசியுள்ளார். ஆனால் கமல், கௌதமியின் உறவை முறித்துக்கொள்ளாததால், விரக்தி விரக்தி அடைந்த சரிகா பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. பிறகு தான் சரிகா மும்பையில் செட்டிலாகி விட்டார். அதற்கு பின்னர் தான் கமல் கௌதமியுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

ஆனால் இவரது இந்த முடிவு, கமலின் மகள்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஸ்ருதி டெல்லி சென்று விட்டார். அக்ஷரா தனது தாயுடன் வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில், கமலும் கௌதமியும் பிரிந்து விட்டனர். இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்ன என யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அண்மையில் தான் நடிகை கௌதமி இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, “ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும்போது அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அதில் நீங்கள் நீடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என கூறியிருந்தார்.

Read more: “என்கூட வந்துரு மா” வீடு தேடி வந்து மனைவியை அடிக்கடி அழைத்துச் சென்ற கள்ளக்காதலன்… ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்..

English Summary

actress attempted to commit suicide

Next Post

கள்ளக்காதலியின் குழந்தைகளை தாக்கி, காயங்கள் மீது மிளகாய் பொடி தூவிய கொடூரன்!!!

Tue Feb 4 , 2025
3 children was brutually attacked by mothers lover

You May Like