பாலிவுட் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்தாண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தீபிகா படுகோன், ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
மேலும், பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் இருக்கிறார். இவர், விளம்பர படங்களில் நடிக்க மட்டுமே சுமார் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது நடிப்பில் கடைசியாக பாலிவுட்டில் ’Singham Again’ என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தான், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு Ramp Walk செய்தார். அவரை பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் இது தீபிகா படுகோன் தானா..? என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஏனென்றால், குழந்தை பிறந்த பிறகு அவர் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.
Read More : தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..!! என்ன காரணம்..? மீண்டும் எப்போது..?