fbpx

Actress Jayalakshmi Arrest | மோசடி வழக்கில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது..!!

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Actress Jayalakshmi Arrest | கடந்த 2022ஆம் ஆண்டு சினேகம் அறக்கட்டளை மூலம் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் புகார் அளித்தார்.‌ இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மாறி மாறி புகார் அளித்து வந்தனர். ஜெயலட்சுமியோ இந்த அறக்கட்டளைதான் நீண்ட ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும், ஒரே பெயரில் அறக்கட்டளைகளையோ, நிறுவனங்களையோ இருவருக்கு எப்படி ஒதுக்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தான் பாஜகவில் வளர்ந்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருக்கும் சினேகன் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இதையடுத்து, சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து விசாரணையில் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றனம் ரத்து செய்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, சினேகன், ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். 3 மணிநேர விசாரணைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read More : https://1newsnation.com/multiplex-theaters-we-will-close-multiplex-theaters-in-tamilnadu-warning-owners-association/

Chella

Next Post

Sonia Gandhi | முதல் முறையாக மாநிலங்களவை எம்பியானார் சோனியா காந்தி..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tue Feb 20 , 2024
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். Sonia Gandhi | ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 250 எம்.பிக்களில் 238 பேர் மாநில சட்டசபைகளில் எம்.எல்.ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். இவர்கள் நியமன எம்பிக்களாக அழைக்கப்படுவர். ராஜ்யசபாவில் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் […]

You May Like