நடிகை ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன். இவர் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பா.ஜ.க பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதையடுத்து சமிபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்திருந்தார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் நடிகை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.