fbpx

ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை  கீர்த்தி சுரேஷ் அணிருந்த  புடவை விலை 3 லட்சமா?

 இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் புடவை அணிந்து கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுப் பொருளாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘வசந்த ராகம்’, ‘சீதா’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.  1993ல் ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கரின் முதல் படமே அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலில் 2டி அனிமேஷனை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்.

அடுத்து  வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காலா’ பாடலில் தலை, கை, கால்கள்  சுடப்பட்ட  பிறகும் பிரபுதேவா  நடனமாடும்  காட்சி மிகப்பெரிய  வரவேற்பை  பெற்றது. அதன் பிறகு, தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலில் ஏதேனும் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டத்தை புகுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஷங்கர். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஐஸ்வர்யா, அதிதி மற்றும் அர்ஜித் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் அவரது மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில், ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, ரன்வீர் சிங், அட்லீ, நயன்தாரா உள்பட நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் புடவை அணிந்து வந்திருந்தார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அவர் அணிருந்த புடவையின் விலை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் புடவை 3 லட்ச ரூபாயா என ஆச்சரியத்தில் வாயடைத்து போகின்றனர்.  

மரணத்தின் அருகில் இருந்த பெண்ணிற்கு பன்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. மருத்துவர்கள் சாதனை!

shyamala

Next Post

ரூ.29 புதிய பிரீமியம் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ சினிமா...! IPL போட்டி இலவச பார்க்க முடியுமா...?

Thu Apr 25 , 2024
ஸ்ட்ரீமிங் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஜியோ சினிமா அதன் பிரீமியம் சந்தாக்களுக்கு விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது, இது முன்பை விட உயர்தர பொழுதுபோக்குகளை அணுகக்கூடியதாக உள்ளது. ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு பெயர் பெற்ற இந்த தளம், மாதத்திற்கு 29 ரூபாய் முதல் சந்தா திட்டங்களை வெளியிட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் 4K தரத்தில் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஏராளமான […]

You May Like