தமிழ் சினிமாவில் 1982ல் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை மீனா. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் வீரா, முத்து, எஜமான் போன்ற படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிறுவயதில் நடிக்க ஆரம்பித்தார் மீனா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். மீனா பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் ஃபேவரெட் நடிகையாக திகழ்ந்து மனதை ஈர்த்து வந்தார்.
இவரது வசீகர அழகில் மயங்கி, அவரை காதலித்த நடிகர்கள் பலர். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, மீனாவின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற சிலரில் ஒருவர் தான் நடிகர் சரத்குமார். ஆனால், அவரது தாய், “என் மகள் இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வருகிறார். அதனால் அவளுக்கு இப்போது திருமணம் செய்யும் யோசனை எல்லாம் எங்களுக்கு இல்லை” என கூறி அவரை அனுப்பிவிட்டார்.. இப்படி மீனாவை பலர் காதலித்தாலும், மீனா ஒருவரை தான் காதலித்தார்.
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, பிரபு தேவா தான். ஆம், நடிகர் பிரபுதேவாவும் நடிகை மீனாவும் டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். எந்த கதாநாயகனுடனும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் பிரபுதேவாவுடன் மீனா படு ரொமான்டிக்கான காட்சிகளில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் நடனம் என்றாலே பிரபு தேவா தான் என்ற பெயரை பெற்று, அப்போது தான் அவர் தனக்கென்ற கால் தடத்தை தமிழ் சினிமாவில் பதித்தார்.
இந்த சுழலில், பிரபுதேவாவிடம் காதல் வயப்பட்டார் நடிகை மீனா. பிரபுதேவாவும் மீனாவை காதலித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனிடையே பிரபு தேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோசம் என்று அவருடன் பணியாற்றிய சக நடிகைகள் கூறியதாக தகவல் வெளியானநிலையில், இந்த தகவலை அறிந்த மீனா, பிரபு தேவாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி இதன் பிறகு தான் மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு குழந்தைக்கு உள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
Read more: கோடை காலத்தில் பால் விரைவாக கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?