நடிகை மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போதுதான் துக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படப்பிடிப்பு ஒன்றில் அவர் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் கணவர் மறைவுக்கு பிறகு மீனா பொது நிகழ்ச்சிகள் மற்றும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். சமீபத்தில் அவரது தோழிகளுடன் வெளியூர் சென்று வந்த நிலையில், கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மீனா, படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போட்டுக்கொள்ளும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார். அதற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்