நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை நேற்று காலமான நிலையில், அவருடன் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘ரன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்திரதாரன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், சண்டக்கோழி, ஆயுத எழுத்து, மம்மட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், 83 வயதான மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மும்பையில் பல ஆண்டுகள் வசித்த இவர், பின்னர் தனது சொந்த ஊரான எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின், மீண்டும் நாம் சந்திக்கும் வரை இந்த புகைப்படங்கள் நினைவில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Read More : மாஸ் உத்தரவு..!! உங்கள் பத்திரங்கள் நிலுவையில் உள்ளதா..? சார் பதிவாளர்கள் மீது பாயும் நடவடிக்கை..!!