மனோரமாவிற்கு இணையாக காமெடியில் கலக்கிய மற்றொரு நடிகை என்றால் அது நடிகை பிந்துகோஷ் தான். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த இவர், பல ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளார். என்ன தான் ஒரு கட்டத்தில் செல்வ செழிப்பாக வாழ்ந்திருந்தாலும், தற்போது 76 வயதை தாண்டிய பிந்து, பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சுயமாக எழுந்து நடக்க முடியாமல், வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று, தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. அதில் அவர் கூறும் போது, “பிபி இருக்கு, சுகர் இருக்கு, ஹார்ட் சர்ஜரி பண்ணாங்க. அது மட்டும் இல்லாம, ஹாஸ்பிடல்ல போய் அட்மிட் ஆன போது, 40 ஆயிரம், 50ஆயிரம் கேக்குறாங்க.
வாழ்றதுக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்க நான் எப்படி அவ்வளவு பணத்தை கொடுக்க முடியும். முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஏதாவது உதவி செய்தால், நன்றாக இருக்கும். சினிமால நல்லா சம்பாதிச்சு சொந்த வீடு வாங்குனேன், ஆனா, எல்லாத்தையும் பசங்களுக்காக விற்றுவிட்டேன். எப்பவும் நான் எனக்குனு எதையுமே சேர்த்து வச்சது இல்ல, புள்ளைங்க புள்ளைங்கன்னு எல்லாத்தையும் என்னுடைய பசங்களுக்காக கொடுத்தேன்.
ஆனால், இப்போ அனாதை மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கேன். என்னோட மூத்த மகன் இப்போ உடம்பு சரி இல்லனு சொல்லியும் வரவே இல்ல. எத்தனை முறை போன் செய்தாலும் எடுக்கவில்லை. இப்போ வீட்டுக்கு மாத வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். எனது இரண்டாவது மகன் பார்த்துக்கொள்கிறான். ஆனால் அவனுக்கு சரியான வேலை இல்லை.
சில வருடத்திற்கு முன் நான் மருத்துவமனையில் இருந்த போது லாரன்ஸ், விஷால் இருவர் மட்டும் தான் உதவி செய்தார்கள். அதன் பிறகு எந்த நடிகரும் எனக்கு உதவி செய்யவில்லை” என்றார்..
Read more: “நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன் டா” ஆட்டோ டிரைவர் மீதுள்ள ஆசையில் பள்ளி மாணவி செய்த காரியம்…