90களில் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம், கன்னடம், போஜ்புரி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1992-ம் ஆண்டு வெளியான சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நக்மா. அப்போது அவருக்கு வயது 15 மட்டுமே. இதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. 1993-ம் ஆண்டு வெளியான உழவன் படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ரம்பா. இதை தொடர்ந்து பல ஹிட் படங்களில் ரம்பா நடித்தார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபுதேவா, அர்ஜுன் என முன்னணியில் இருந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ரம்பா. தொடையழகி என்று அழைக்கப்பட்ட ரம்பா அன்றைய கால இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மொழியில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதே மிகப்பெரிய விஷயம். ஆனால் 90களில், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகன்லால், சல்மான் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் அவர் பணியாற்றினார்.
திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே, ரம்பா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த நடிப்பிலிருந்து விலக முடிவு செய்தார். 2010 ஆம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாதனை ஏப்ரல் 8 ஆம் தேதி மணந்தார்.
இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் – அதாவது, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க ரம்பா முடிவு செய்ததால், 2011-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஃபிலிம்ஸ்டார் அவரின் கடைசி படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு, அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
ரம்பாவின் சொத்து மதிப்பு
திரைத்துறையை விட்டு விலகினாலும் பணக்கார நடிகைகளில் ஒருவராக நடிகை ரம்பா வலம் வருகிறார். ஆம்.. 14 ஆண்டுகளில் ரம்பா எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் அவரிடம் சல்மான் கான், ஹ்ருத்திக் ரோஷனை விட அதிக சொத்துக்கள் இருக்கின்றன. முதலீடுகள் மற்றும் வணிக புத்திசாலித்தனத்தால், தொழில்துறையில் ரம்பாவால் தனது சக நடிகர்களை விட மிக அதிகமாக ஒரு நிதி சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, கனடா மற்றும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உட்பட ரம்பா ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.