fbpx

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச மார்பிங் வீடியோ!… கொந்தளித்த அமிதாப் பச்சன்!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச மார்பிங் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அமிதாப் பச்சன் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஷ்மிகா ’புஷ்பா 2’ ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவை மார்பிங் செய்து, கிளாமர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் இதன் ஒரிஜினல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஷாரா படேல் என்ற நடிகை தான் அந்த வீடியோவில் ஒரிஜினலாக இருப்பது என்றும், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து இந்த வீடியோ மார்பிங் செய்து வெளியாகி உள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது சட்டப்படி குற்றம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

Kokila

Next Post

சூடான டீயில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடியுங்கள்!… நோய்கள் அண்டாது!… ஷேவிங் க்ரீமாகவும் பயன்படுத்தலாம்!

Wed Nov 8 , 2023
பல வகையான உணவு பொருட்களில் இருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகளில் ஒன்றான “தேங்காய் எண்ணெய்” மிக நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் எண்ணெய் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் […]

You May Like