நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. கடந்த ஆண்டு தன் காதல் கணவன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கினார். புஷ்பா படத்தில் இவரது கிளாமர் நடனம் வெகுவாக கவர்ந்ததை அடுத்து, நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். பின்னர் தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தது.
கடந்த நவம்பர் 11ம் தேதி யசோதா என்ற திரைப்படம் வெளியானது. சமந்த இந்த படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை ஈட்டி வந்தது. குறிப்பாக 10 நாட்களில் ரூ.33 கோடி வசூலித்துள்ளது என்று படக்குழு அறிவித்திருந்தது.
யசோதா திரைப்படத்தில் ஆக்ஷன் நடிகையாக நடித்துள்ளார். இத அவருக்கு பெரும் வெற்றி என்றே கூறலாம். அதே வேளையில் இந்த வெற்றியை கொண்டாட முடியாமல் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இதற்காக 3 மாதங்கள் சிகிச்சை எடுத்து வருகின்றார். தற்போது அதிலிருந்து படிப்படியாக குணமாகி வருவதாகவும் யசோதா படத்தின் புரோமோஷனின்போது கூறி கண்ணீர் சிந்தினார் சமந்தா.
தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு உடல்நிலை மோசமமைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை.