fbpx

கருப்பை நார்த்திசுக் கட்டிகளால் பாதிக்கப்பட்ட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

மராத்தி நடிகை கிருத்திகா கெய்க்வாட் தனது சமூகவலைதளங்களில் வெளியிட்ட வீடியோவின் தான் கருப்பை நார் திசுக்கட்டிகள் என்ற மருத்துவ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மராத்தி நடிகை கிருத்திகா கெய்க்வாட் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், கிருத்திகாவின் வயிறு பெரிதாக தெரிகிறது. வீடியோவைப் பார்த்த பிறகு பலர் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தார்கள், ஆனால் கிருத்திகா கெய்க்வாட் பல ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்ற மருத்துவ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், “இப்படி தன் வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கருப்பை நார் திசுக்கட்டிகள் என்று கூறியுள்ளார். இதுபற்றி மேலும் அவர் பகிர்ந்திருப்பதாவது, “இது பல ஆண்டுகளாக உருவாகும் கருப்பை நார் திசுக்கட்டிகள். நார்த்திசுக்கட்டிகள் என்றால் கருப்பையின் சுவரில் வளரும் தசைக் கட்டிகள் ஆகும். இவற்றை ஃபைப்ராய்டுகள் என்று சொல்வார்கள். இது தீங்கற்றவை. புற்றுநோய் என்று பயப்பட வேண்டாம். நார் திசுக்கட்டிகள் உள்ள அனைத்து பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவது கிடையாது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகப்படியான வலி மற்றும் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்கும். கர்பப்பையில் இவற்றின் வளர்ச்சி சில சமயம் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும். இல்லையெனில், ஒரு சில திராட்சைப்பழ அளவுக்கு பெரியதாக இருக்கும்.

மிகவும் பெரியதாக இருக்கும் ஒரு நார் திசுக்கட்டி கருப்பையின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சிதைக்கும். இது இன்னும் தீவிரமானால், இடுப்பு அல்லது வயிற்றுப் பகுதியை நிரப்பும் அளவுக்கு பெரியதாக வளரும். பார்க்கும்போது, கர்ப்பமாக இருப்பது போல தோன்றும். அதனால், பெண்களே விழிப்புடன் இருங்கள்! தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்” என்று அவர் நீண்ட பதிவைப் பகிர்ந்துள்ளார்.

கங்கை நீரை உங்கள் வீட்டில் வெச்சிருக்கீங்களா..? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

Next Post

'அட்ஜஸ்ட்மெண்ட்’..!! ’ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்குவேன்’..!! ஓபனாக பேசிய பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா..!!

Thu May 16 , 2024
சீரியல் பிரபலமானால் அதனுடன் சேர்ந்து நடிக்கும் கதாபாத்திரங்களும் பிரபலமாகிவிடுவர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி TRP ரேட் குறைந்து செல்லும் ஒரு சீரியல் என்றால், அது பாக்கியலட்சுமி தான். இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா கூறிய வார்த்தைகள் தான் தற்போது வைரலாகி வருகின்து. டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ரேஷ்மா. சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். […]

You May Like