Breast Cancer: மாதத்திற்கு ஒருமுறை உங்கள் ஆரஞ்சுப் பழங்களைச் சரிபார்க்கவும்’ என்ற தலைப்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஆரஞ்சுப் பழங்களை வைத்திருக்கும் ஒரு பெண்ணின் AI விளம்பரத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து டெல்லி மெட்ரோ நிறுவனம் உடனடியாக நீக்கியது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது . இதில் you we can பவுண்டேஷன் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த விளம்பரத்தில் 2ஆரஞ்சு பழங்களுடன் சேலை அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் நின்று கொண்டிருக்கும் சித்திரம் உள்ளது. அவருக்கு அருகே கூடை நிறைய ஆரஞ்சு பழங்களுடன் முதிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கின்றார்.
இதில் மாதத்திற்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள் என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பகங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது. மேலும் 25 வயதை எட்டிய பெண்கள் ஒவ்வொரு மாதமும் மார்பகத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை தவறாக முடிந்துள்ளது. இந்த போஸ்டர்கள் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. ஆகவே டெல்லி மெட்ரோ சேவை நிர்வாகம் இந்த போஸ்டர்களை திரும்ப பெற்றதாக அறிவித்துள்ளது.
Readmore: அதிர்ச்சி!. காசாவுக்கும் ஹிரோஷிமா – நாகசாகி நிலைமைதான்!. சொன்னது யார் தெரியுமா?.