fbpx

அதானி ஊழல்..!! குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியது மோடி தான்..!! பாமகவை வெளுத்து வாங்கிய வைகோ..!!

அதானி ஊழல் பிரச்சனையை ராமதாஸ் திசை திருப்ப முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்திய பொருளாதாரத்தில் விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு விசாரணை குழுவுக்கு மோடி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் மோடி தான் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில் அதானி குழுமத்திற்கு நெருக்கமான பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை தொடுக்க வேண்டிய பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், வதந்திகளை செய்தியாக்கும் நோக்கத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் மீது குற்றம் சாட்டி அறிக்கை விடுத்தார். மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தலைமை அமைச்சர் மீது ஏன் குற்றச்சாட்டு முன்வைக்கவில்லை..?

திமுக மீதும், தமிழக அரசு மீதும் புழுதி வாரித் தூற்றும் நோக்கத்தோடு அறிக்கை கொடுத்தார். அது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார். பொறுப்பற்ற பொய் வதந்திகளுக்கு எல்லாம் முதலமைச்சர் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. இதனால், சரியான பதிலை ஒரு வரியில் சொல்லிவிட்டார். இந்தப் பிரச்சனையில் மோடி மீது குற்றச்சாட்டு வைக்க பாமக தயாரா..? பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பிரச்சனையை திசை திருப்ப பாமக தலைவர் முயற்சிக்கிறார். ஆனால், அந்த முயற்சி எல்லாம் பயனற்று போகும்” என தெரிவித்துள்ளார்.

Read More : கனமழையால் தத்தளிக்கும் மக்கள்..!! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க..!!

English Summary

MDMK General Secretary Vaiko has accused Ramadoss of trying to divert attention from the Adani corruption issue.

Chella

Next Post

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்!. ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி தேர்வு!

Wed Nov 27 , 2024
Brahmos Aerospace appoints new chairman! Missile scientist Dr. Jaytheerth Raghavendra Joshi selected!

You May Like