fbpx

போதை ஊசிக்கு அடிமை..!! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..!! பிரிந்த இன்ஸ்டா ஜோடி..!! வீடியோவில் ஷாக்கிங் தகவல்..!!

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த காதல் ஜோடிகளான தேசராணி – ஹரி ஜோடி பிரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையில் கிடைக்கும் போதை ஊசி பழக்கம் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளதால் விரைவில் இதில் போலீசார் ஆக்சன் எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் டோரா புஜ்ஜி என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் ஜோடி தான் தேசராணி – ஹரி ஜோடி. இவர்கள் இரண்டு பேருமே பெண்கள்தான். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்கள், காதலில் விழுந்து ஒன்றாக வீடியோ போட தொடங்கினர். இதில் ஹரி, ஆண் போல வேடம் அணிந்து தேச ராணியுடன் சேர்ந்து வீடியோ போட்டு வந்தார். இவர்கள் தன்பாலின ஜோடி என்பதால், இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமாக இருந்தனர்.

இந்நிலையில், இந்த ஜோடி தற்போது பிரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னையில் கிடைக்கும் போதை ஊசி பழக்கம் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளதால் விரைவில் இதில் போலீசார் ஆக்சன் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை தேசராணி வெளியிட்டுள்ளார். அதில், ஹரி என்னை ஏமாற்றிவிட்டார். அவர் போதை ஊசிக்கு அடிமையாகி விட்டார். எனக்கு தெரியாமல் போதை ஊசி பழக்கம் அவருக்கு வந்துவிட்டது. இதை கண்டுபிடித்து அவரை கண்டித்தேன்.

சில நாட்கள் நன்றாக இருந்தார். ஆனால், மீண்டும் என்னை ஏமாற்றி அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். அவர் போதை ஊசி போடும் போது நான் நேரில் பார்த்தேன். அவரை மன்னிக்கவே மாட்டேன். அதோடு அவர் பணமோசடியும் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ப்ரோமோஷன் செய்கிறேன் என்று கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால், அதை என்னிடமும் கொடுக்கவில்லை. ப்ரோமோஷனும் செய்யவில்லை.

என் அம்மா நான் பிரபலமாக இருப்பதால் ரூ.5 லட்சத்தை கார் வாங்க கொடுத்தார். அவர் மீன் விற்பனைத்தான் செய்கிறார். ஆனால், அப்படியும் காசு சேர்த்து எனக்காக ரூ.5 லட்சம் கொடுத்தார். ஆனால், அதிலும் ரூ.3 லட்சத்தை மட்டுமே கார் வாங்க பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்தை ஹரி ஏமாற்றிவிட்டார். அவருக்கு போதை பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டது. அதோடு இல்லாமல் பலரை ஏமாற்றி உள்ளார். அவர் ஏமாற்றியவர்கள் இப்போது என்னிடம் காசு கேட்டு தொல்லை செய்கின்றனர்” என்று தேசராணி கூறியுள்ளார்.

Chella

Next Post

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை..? விரைவில் அறிவிப்பு..!!

Mon Dec 18 , 2023
சென்னைக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூ. 6000-க்கு இணையாக தென் மாவட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவர்களுக்கான ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் இந்நிலையில், தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

You May Like