fbpx

தலைக்கேறிய போதை..! வளர்த்த பாட்டியை கொலை செய்துவிட்டு, பேரனும் தற்கொலை..!

கஞ்சா போதையில் பாட்டியை கொலை செய்துவிட்டு, செய்வதறியாது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பேரன்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மா, இவரது மகன் புஷ்பராஜ். இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தாயுடன் வசித்து வந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். புஷ்பராஜூக்கு அஜித் (23) என்ற மகன் உள்ளார். தந்தை புஷ்பராஜ் உயிரிழந்தபின் பேரன் அஜித் பாட்டியான தாசம்மாவுடன் வசித்து வந்தார். அஜித் வண்ணம் தீட்டும் பணிக்கு சென்று வந்துள்ளார்.

பொதி பழக்கத்திற்கு அடிமையான அஜித் தினமும் கஞ்சா போதையில் வந்து பாட்டியான தாசம்மாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கபோல் மிகுந்த கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த அஜித் தனது இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி பாட்டி தாசம்மாவிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாட்டியை அஜித் கீழே தள்ளிவிட்டதில் கட்டிலில் மோதி பாட்டி தாசம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து செய்வதறியாது திகைத்த பேரன் அஜித் வீட்டினுள் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவட்டார் காவல்துறையினருக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த பாட்டி தாசம்மா மற்றும் பேரன் அஜித் ஆகியோரின் உடல்களை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கஞ்சா போதையில் பாட்டியை பேரன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு செய்வதாக, 1.20 லட்சம் ரூபாயை ஏமாற்றிய காங்கிரஸ் கவுன்சிலர்..!

Sat Apr 20 , 2024
குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி 1,20,000 ரூபாய் ஏமாற்றிய கோவை மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் மீது மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன்- லதா தம்பதியினர். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால், செல்வபுரம் குடுசைமாற்று வாரியத்தில் வீடு வேண்டி தெற்கு வட்டாட்சியர் வருவாய் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக […]

You May Like