பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வரும் மே 1-ம் தேதி முதல் ஒரு புதிய விதியை நடைமுறைப்படுத்துகிறது.. அதன்படி வங்கிக்கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ரூ. 10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று PNB வங்கி அறிவித்துள்ளது.. பிஎன்பி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெபிட் கார்டுகள் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் வருடாந்திர கட்டணத்தை அதிகரிக்கவும், டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஒரு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் பிஎன்பி வங்கி வங்கி வழங்கி உள்ளது..
அதன்படி, பிஎன்பி கார்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, வாடிக்கையாளர்கள் 1800 180 2222 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து தங்கள் கார்டை பிளாக் செய்யலாம். இதே போல் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து 5607040 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவது அல்லது இணைய வங்கிச் சேவையில் உள்நுழைவது உள்ளிட்ட பல முறைகள் மூலம் தங்கள் கார்டை பிளாக் செய்யலாம். ஏடிஎம்மில் பணம் எடுப்பது தோல்வியடைந்தாலும், கணக்கில் இருந்து தொகை ஏற்கனவே கழிக்கப்பட்டிருந்தால், அத்தகைய புகார்கள் 7 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.
பிஎன்பி வங்கியின் புதிய கொள்கை மாற்றங்கள் வங்கியின் சேவைகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுள்ளது.. பிஎன்பி வங்கியின் இணையதளத்தை தவறாமல் சரிபார்ப்பதன் மூலம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏதேனும் அப்டேட் அல்லது மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்..