fbpx

அடேங்கப்பா!… ஹேர்கட்-க்கு விராட் கோலி எவ்வளவு செலவழிக்கிறார் தெரியுமா?

Virat Kohli: இந்தியா பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உலகிற்கு அளித்துள்ளது, அந்த வரிசையில் தோல்விகளைக் கண்டு துவளாத விராட் கோலியும் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கரின் விடாமுயற்சியையும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் பிட்னஸையும் கலவையாக கொண்ட விராட் கோலி கிரிக்கெட் பயணம் சுவாரஸியமானதுதான்.

இது ஒருபுறம் இருக்க, தனது ஆடைகள், ஹேர் ஸ்டைலை அவ்வபோது மாற்றி ரசிகர்களுக்கு புதிய லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில், தற்போது விராட் கோலியின் ஹேர் ஸ்டைலும் அதற்காக அவர் செலவழித்த தொகை குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம் (hairdresser Aalim Hakim) கூறுகையில், “நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை வசூலிக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நான் விராட் கோலிக்கு எவ்வளவு ரூபாய் வாங்கினேன் என்பது தெரியாது. நான் ஹேர் கட் செய்வதற்கு வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம் ரூபாய்.

விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய இருவரும் என்னுடைய பழைய நண்பர்கள். அவர்கள் என்னிடம் தான் ஹேர் கட் செய்து வருகிறார்கள். இப்போது ஐபிஎல் தொடங்கியுள்ளதால் வித்தியாசமாக ட்ரை பண்ண வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு, விராட் கோலியும் இந்த முறை இப்படி செய்யலாம், அடுத்த முறை இப்படி செய்யலாம் என்று பேசுவார்.

அதன்படி, IPL 2024 க்காக விராட் கோலிக்கு வித்தியசமான சூப்பர் லுக்கை கொடுக்க முடிவு செய்து அவரது புருவத்தின் ஒரு லேசான கட் ஒன்றை வைத்து, சைடுகளை பேட் (Fade )செய்தோம். அவரது முடிக்கு கலரிங் பின்பக்கத்தில் முள்ளெட் டெக்ஸ்சர் கொடுத்தோம். அவரது இந்த ஹேர் ஸ்டைல் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ஸ்டைல், பேஷன் என்று வந்துவிட்டால் விராட் கோலி நம்பர் ஒன். அதேபோல தோனியை பொறுத்தவரை அவர் பாலிவுட் நடிகர்களுக்கு குறைந்தவரில்லை” என்றார்.

Readmore: ’குல தெய்வ சாபம் வம்சத்தையே சீரழிக்கும்’..!! மக்களே இதை மட்டும் என்றைக்கும் மறக்காதீங்க..!!

Kokila

Next Post

வெயில் இந்த அளவை தாண்டினால் மரணம்தான்!... மனிதனால் எவ்வளவு வெப்பத்தைத் தாங்க முடியும்?

Thu Apr 11 , 2024
Heat: நாட்டில் கோடை காலம் தொட்டுவிட்டது. தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அனல் காற்று வீசிவருகிறது. ஆனால் ஒரு மனிதனால் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பம் அல்லது வெப்பநிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். புதிய ஆய்வின்படி, ஒரு நபர் எவ்வளவு வெப்பத்தை பொறுத்துக்கொள்ள முடியும் என்றால், ஒரு ஆரோக்கியமான நபர் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை தாக்குபிடிக்கமுடியும் என்று […]

You May Like