இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ள நிலையில் அவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எளிதில் ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்துச் செல்கின்றனர். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். அதாவது நம்முடைய வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் ஏடிஎம் மூலம் மேலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
ஏடிஎம் இயந்திரத்தின் அடிப்படை வேலை பணம் எடுப்பது பணம் எடுக்க ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு ஏதாவது ஒன்று இருந்தால் அதை பயன்படுத்தி நம்மால் பணத்தை எடுக்க முடியும். பணம் எடுப்பதை தவிர ஏடிஎம் இயந்திரம் மூலம் நம்முடைய கணக்கு இருப்பையும் சரி பார்க்கலாம். கடந்த பத்து நாட்களில் பரிவர்த்தனைகளும் அதில் காட்டப்படும். கடைசி பரிவர்த்தனைகளை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு மினி ஸ்டேட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் மூலமாக விசா கிரெடிட் கார்டுக்கான நிலுவைத் தொகையையும் செலுத்தலாம். ஆனால் இந்த வேலைக்கு கிரெடிட் கார்டு இருப்பது அவசியம் தேவை. ஏடிஎம் மூலமாக ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியும்.
atm கார்டு மூலம் 16க்கும் மேற்பட்ட கணக்குகளை இணைக்கலாம். இதில் பண பரிமாற்றம் முற்றிலும் பாதுகாப்பானது. காசோலை புத்தகம் முடிந்து விட்டால் அதற்காக வங்கிக்கு செல்ல வேண்டாம். ஏடிஎமிற்கு சென்று காசோலை புத்தகத்தை கோறலாம். இதை கோருவதன் மூலம் உங்களுடைய புதிய காசோலை புத்தகம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படும். ATM பின் நம்பரை மாற்றிக் கொள்ளலாம். பின் நம்பரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் இதன் மூலம் மோசடியில் இருந்து தப்பிக்கலாம். ஏடிஎம்மில் சென்று மொபைல் பேங்கிங் வசதியை செயல்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் பயன்பாட்டு பில்களையும் செலுத்தலாம். சொல்லப்போனால் இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் யுபிஐ முறையை பணம் செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் இது மிகவும் எளிதானது.