டைட்டானிக் கப்பலில் பயணிகள் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல்(மெனு கார்டு) வெளியாகி சமூக வலைதலங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
உலகிலேயே முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலான ‘டைட்டானிக்’ 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியன்று அதிகாலை 2.19 மணியளவில் எதிர்பாராத விதமாகப் பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் உயிரிழந்தனர்.1160 பேரை காணவில்லை. 705 பேர் உயிர் பிழைத்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகளைக் கடந்தும் உலக மக்களின் நினைவுகளில் இருந்து நீங்காமல் மிதந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றுவரை சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்களையும், கப்பல் ஆய்வாளர்களையும் டைட்டானிக் தன்மீதான பார்வையை அகற்ற அனுமதிக்கவே இல்லை டைட்டானிக் கப்பல். டைட்டானிக் கப்பலின் பிரம்மாண்டத்தை போல அது குறித்த ஏராளமான புத்தகங்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய 111வது நினைவு தினமான ஏப்ரல் 15ல் டைட்டானிக் அட்லஸ் என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான இரவு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனு பகிரப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கப்பலின் முதல் வகுப்பு பயணிகளுக்கு ஃபில்லட்ஸ் ஆஃப் ப்ரில், கார்ண்ட் பீஃப், வெஜிடபில்ஸ், டம்ப்ளிங்ஸ், க்ரில்ட் மட்டன் சாப்ஸ், கஸ்டர்ட் புட்டிங், பாட்டட் ஷ்ரிம்ப்ஸ், நார்வேஜியன் ஆன்சோவீஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
சிக்கன் கறி, வேகவைத்த மீன், ஸ்ப்ரிங் லேம்ப், ஸ்ப்ரிங் மட்டன், டர்கி ரோஸ்ட், புட்டிங் எனப் பரிமாறப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் டெஸர்ட்டாக பரிமாறப்பட்டுள்ளது.மூன்றாம் வகுப்பு பயணீகளுக்கு ஓட்மீல் பாரிட்ஜ், பால், ஸ்மோக்ட் ஹெர்ரிங்ஸ், ஜேக்கட் பொட்டேடோஸ், முட்டைகள், ஃப்ரெஷ் ப்ரெட், பட்டர், மர்மலேட், ஸ்வீடிஷ் ப்ரெட் போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மெனு கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.