fbpx

“BJP வென்றால் அதானி அம்பானியிடம் தான் நாடு இருக்கும்.” -சீமான்

’வேங்கைவயல் விவகாரம்’..!! ’நான் முதல்வராக இருந்திருந்தால்’..!! கொந்தளித்த சீமான்..!!

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதானி அம்பானியிடம் இந்தியா விற்கப்படும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோடு மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எதிரி கிடையாது சுற்றிலும் எதிரிகள் உள்ளது. காங்கிரஸ், திமுக பாஜக அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் கோட்பாடும் தமிழ் சமூகத்திற்கு எதிரானது. இதனை கவனத்தில் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

எதிலும் கலப்படத்தை விரும்பவில்லை மக்கள் ஆனால் உயிருக்கு நிகரான மொழியில் பிற மொழியை கலந்து கலந்து பேசுகிறார்கள். உலகத்தில் எந்த மொழியும் பிற மொழி துணையின்றி வாழும் மொழி தமிழ் மொழி. 5 ஆண்டு போதும் பூமியின் சொர்க்கமாகத் தமிழகத்தினை மாற்றுவோம். 10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார். மக்கள் மத்தியில் இவ்வுள்ள திட்டம் கொண்டு வந்தேன் என்று மோடி செய்தியாளரைச் சந்திப்பாரா?

ஜாதி மதம் கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப்பற்றி சிந்திப்பவன் ஜாதி மதத்தை சிந்திக்க நேரம் இருக்காது. இன்னொரு முறை பாஜக கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்திய நாட்டை மறந்து விட வேண்டும். 90 சதவீதம் நாடு ஏற்கனவே விற்கப்பட்டது. அப்போது அதானி அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கும்”  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Next Post

'கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?' - திக்விஜய் சிங் கேள்வியும், கங்கனாவின் பதிலும்..

Thu Apr 11 , 2024
கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கச்சத்தீவு விவகாரம் தேசிய அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒரு […]

You May Like