விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வாழ்த்து பெற்றார் ஆதவ் அர்ஜுனா.
நடிகர் விஜய் அண்மையில் தமிழகம் வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி அதற்கு பொறுப்பாளர்கள் நியமித்து வருகிறார். இந்தநிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை முதல் இரண்டு கட்டங்களாக தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்து கட்சி வளர்ச்சி மேம்பாட்டுக்காக எவ்வாறு பணி செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தலை வழங்கி மாவட்டச் செயலாளர்களை அறிவித்தார்.
இதனிடையே அதிமுக ஐடி விங்கின் இணைச் செயலாளராக பணியாற்றிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் அக் கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவர் பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதே போல் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு பின்பு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அலுவலகத்திற்கு வெளியே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
பின்னர் தவெக தலைவர் விஜயின் முன்னிலையில் தன்னை கட்சிகள் இணைத்து கொண்டார். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த வாழ்த்து பெற்றார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, ”கொள்கை ரீதியான பயணத்தையும், கள அரசியலையும் எனது ஆசான் திருமாவளவன் அவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற்றுக் கொண்டேன்.
புதிய பொறுப்பு தமிழக வெற்றி கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, கொள்கை ரீதியாக என்னுடைய பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். எந்த காலத்திலும் அம்பேத்கர், பெரியார் கொள்கைப்படி ஆன அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பதை திருமா அவர்கள் என்னிடம் வலியுறுத்தினார். நிச்சயமாக என்னுடைய மூச்சு உள்ளவரை அதே கொள்கையில் பயணிப்பேன் என தெரிவித்துள்ளார்.