fbpx

விஜய் கட்சியில் இணையும் ஆதவ் அர்ஜுனா..!! பரபரக்கும் அரசியல் களம்..!! பக்கா பிளான்..!! 2026இல் அது உறுதியாம்..!!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனா செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய், 2026 தேர்தலை இலக்காக வைத்து பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாடு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தவெகவுக்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் தேர்தல் ஆலோசகராக இருந்த நிலையில், சமீப காலமாக விஜய்யும் ஆதவ் அர்ஜூனாவும் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் பணிக்காக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தை விஜய் ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மாற்றுக் கட்சியிலிருந்து பிரபலங்கள் தவெகவுக்கு வர விரும்பியதாகவும், அதை ஜான் ஆரோக்கியசாமி தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, தவெக மற்றும் புஸ்ஸி ஆனந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேட்டியளித்ததும், விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், தேர்தல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாவை நியமனம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தவெக நிர்வாகிகளுடன் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை நடத்துவார்.

Read More : சூப்பர் திட்டம்..!! பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1.5 லட்சம் வரை கடன்..!! எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்..? தமிழ்நாடு அரசு அதிரடி..!!

English Summary

It has been reported that Adhav Arjuna will act as the election advisor for Vijay’s Tamil Nadu Victory Party.

Chella

Next Post

தேமல் அலட்சியம் வேண்டாம்!. "ஒன்றுபடுங்கள்; சட்டம் இயற்றுங்கள்"!. இன்று உலக தொழுநோய் தினம் 2025!.

Thu Jan 30 , 2025
Don't ignore Themal!. "Unite; legislate"!. Today is World Leprosy Day 2025!.

You May Like