Atishi: தலைநகர் டெல்லியின் முதல்வராக அதிஷி இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்கிறார். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர்கள் முகேஷ் அஹ்லாவத், கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
மதுபான கொள்கை முறையீடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலை, இதே வழக்கில் சிபிஐ தரப்பிலும் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவருக்கு, கடும் நிபந்தனைகளுடுன் ஜாமீன் வழங்கியது. தலைமைச் செயலகம் சொல்லக்கூடாது, அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
டெல்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக அதிசி தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வர் வேட்பாளராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் ஆளுநரிடம் கொடுத்தார். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை முறைப்படி நேற்று இரவு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் இன்று டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க உள்ளார். ராஜ் நிவாஸில் இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் விகே கச்சேனா அதிஷிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர்கள் முகேஷ் அஹ்லாவத், கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். மேலும், புதிய அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள் தங்கள் முந்தைய இலாகாக்களை வைத்திருக்க வாய்ப்புள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.
Readmore: இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!. அமெரிக்காவில் அதிர்ச்சி!