fbpx

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1!… 2ம் கட்ட சுழற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது!… இஸ்ரோ!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், வரும் 10ம் தேதி மதியம் 2.30 மணி அளவில் அடுத்த அதாவது 3வது சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

இந்தியா கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல்..! 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடக்கம்...

Tue Sep 5 , 2023
கேரளா, திரிபுராவில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்தியா கூட்டணி இன்று நடைபெறவுள்ள 7 தொகுதிகளில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, […]

You May Like